லொம்போக் பள்ளிவாசல் இடிபாடுகளில் தேடும் பணி தீவிரம்

லொம்போக் பள்ளிவாசல் இடிபாடுகளில் தேடும் பணி தீவிரம்

1 mins read
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை ஞாயிற்றுக் கிழமை உலுக்கிய நிலநடுக்கத் தில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 105ஆக உயர்ந்துள்ள நிலையில் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு பள்ளிவாசல் இடிபாடுகளில் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வடலொம்போக் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாகக் கூறப் பட்டது. அவர்களில் சிலர் உயிரு டன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மண் தோண் டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மீட்புக் குழுவினர் தேடி வரும் வேளையில் கிராம மக்கள் அந்த இடத்தில் கூடியுள்ளனர். நவீன சாதனங்கள் இல்லாததால் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர் நோக்குவதாகக் கூறப்படுகிறது.