மோசடி புத்த பிக்குக்கு 114 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மோசடி புத்த பிக்குக்கு 114 ஆண்டுகள் சிறைத் தண்டனை

1 mins read

பேங்காக்: தாய்லாந்து நீதிமன்றம், மோசடி புத்த பிக்குக்கு நேற்று 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அமெரிக்காவிலிருந்து விரா போன் சுக்போன் கொண்டு வரப் பட்டு ஓராண்டுக்கு மேல் நீடித்த விசாரணைக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் விலை உயர்ந்த குளுகுளு கண் ணாடியை அணிந்து ஆடம்பர கைப்பையுடன் விராபோன் சுக் போன் தனியார் விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் பல் வேறு ஊடகங்களில் தீயாகப் பர வியது.

இதையடுத்து 39 வயது விரா போன் அமெரிக்காவுக்குத் தப்பி யோடினார். இந்நிலையில் வயது குறைந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத் தில் ஈடுபட்டதாகவும் மரகதக் கல்லில் ஆகப்பெரிய புத்தர் உருவச்சிலையை உருவாக்கப் போவதாகவும் கூறி நன்கொடை யாளர்களை ஏமாற்றியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் அமெரிக்காவிலிருந்து அவர் தாய்லாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.