மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; லொம்போக்கில் மக்கள் ஓட்டம்

மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; லொம்போக்கில் மக்கள் ஓட்டம்

1 mins read
e4e648d3-5cf5-40c6-844c-ed70398404fe
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கி யுள்ளது. இதனை சற்றும் எதிர் பாராத மக்கள் அதிர்ச்சியில் உயிரைப் பிடித்துக்கொண்டு சாலையில் ஓடினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்திலிருந்து இன்னமும் மக்கள் மீண்டு வராத நிலையில் நேற்று மற்றொரு நில நடுக்கம் லொம்போக்கை உலுக் கியது. ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் பீதியில் சாலையில் ஓட்டம் பிடித்த னர். பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன.

இந்நிலையில் மீண்டும் அதே அளவில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் செய்வ தறியாது அதிர்ச்சியில் உறைந் தனர். சில கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டது என்று இந்தோனீ சியாவின் பேரிடர் நிர்வாகப் பிரி வின் பேச்சாளர் சுடோபோ புர்வோ தெரிவித்தார். நிலநடுக்கத்தின் மையம் நிலப் பகுதியில் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் சொன்னார்.