நாடாளுமன்றத்துக்குத் திரும்ப அவசரமில்லை: அன்வார் இப்ராஹிம்

நாடாளுமன்றத்துக்குத் திரும்ப அவசரமில்லை: அன்வார் இப்ராஹிம்

1 mins read

மலேசியாவில் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம், நாடாளு மன்றத்துக்குத் திரும்புவதில் அவசரம் காட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார். மலேசியாவை ஆளும் பக்கத்தான் ஹரப்பானில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் ரக்யாட் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிம் இரண்டு ஆண்டுகளில் பிரதமராக்கப் படுவார் என்று தேர்தலில் வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவ காரத்தில் கருத்திணக்கம் காணப்பட்டுள்ளதாக அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். "கெஅடிலான் ராக்யாட் கட்சித் தேர்தலுக்கே தற்போது முன்னுரிமை வழங்கப்படும்," என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிகளை தமக்காக விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாவும் அவர் சொன்னார்.

"நாடாளுமன்றத்தில் நான் பங்கேற்பதிலிருந்து நான் பிரத மராகும் நடைமுறை தொடங்கு கிறது. பிரதமர் பதவி மாற்றம் இரண்டு ஆண்டுகளில் நடை பெறும். "யாரும் இறக்கவில்லை யென்றால் ஐந்து ஆண்டுகளில் நடக்கும்," என்று அன்வார் தெரிவித்தார். முன்னதாக பேசிய செலா யாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான வில்லியம் லியோங், கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப் ராஹிமுக்காக தங்களுடைய தொகுதியை விட்டுக் கொடுக்க விருப்பமாக உள்ள னர் என்று கூறியிருந்தார். இதையே வலியுறுத்திய சுங்கை பட்டானி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல், தனது தொகுதியையும் அன் வாருக்காக விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளார்.