ஆப்கானிஸ்தானில் போராளிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் போராளிகள் தாக்குதல்

1 mins read
35e56a7a-08ed-4977-b071-27aa629be17f
-

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந் தது நால்வர் உயிரிழந்ததாகவும் சுமார் 12 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். காபூல் அருகே உள்ள நகரில் போராளிகள் நேற்று ஒருங் கிணைந்த தாக்குதலை நடத்திய தாகவும் காஸ்னி நகரின் நான்கு புறங் களிலிருந்தும் போராளிகள் சரமாரியாக தாக்குதல் நடத்திய யதாகவும் மாநில அரசாங்கப் பேச்சாளர் முகமட் அரிஃப் நூர் கூறினார். கனரக ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்தி போராளிகள் தாக்குதல் நடத்திய தாகவும் அவர் சொன்னார்.

வியாழக்கிழமை இரவு அந்நகருக்குள் புகுந்த போராளி கள் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. போராளிகளின் அத் தாக்குதலைத் தொடர்ந்து அவர்கள் மீது ஆப்கான் வீரர்கள் கடுமையாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இரு தரப்பின ருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெகுநேரம் நீடித்ததாக வும் அப்பேச்சாளர் சொன்னார். காஸ்னி நகர பாதுகாப்புப் படையினர், தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளில் பலரை அங்கிருந்து விரட்டியடித்ததாகக் கூறப் படுகிறது. ஆப்கான் அரசாங்கமும் போராளிகளும் செய்துகொண்ட சண்டை நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்த நிலையில் அங்கு மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. தலிபான் போராளிகளும் ஐஎஸ் போன்ற பயங்கரவாதக் குழு வினரும் ஆப்கானில் ராணுவத் தையும் மக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். படம்: இபிஏ