ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக பழமைவாத சமய குரு மருஃப் அமினை அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்ந்தெடுத் திருப்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அவர் தனது முடிவை தற்காத்துப் பேசியுள்ளார்.
"பேராசிரியர் மருஃப் அமின் ஏன் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இந்தோனீசிய மக்கள் கேள்விகள் கேட்கலாம். ஏனெனில் அவர் அறிவார்ந்த சமயத் தலைவர்," என்று ஜோக்கோ விடோடோ கூறினார். நாட்டுப் பற்று மற்றும் சமயத் தலைவர்களை பிரதிபலிக்கும் வகையில் நாம் ஒருவருக்கொருவர் சேர்ந்து நிறைவான பணியை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். சமய குருவான மருஃப் அமின் நமது தேசிய வளங்களை பாதுகாப்பார் என்று ஜோக்கோவி என்றழைக்கப்படும் ஜோக்கோ விடோடோ தன் ஆதரவாளர்களிடம் கூறினார். தேசியமயமாக்கும் தனது கொள்கைகளுக்கான ஆதாரங் களை அவர் குறிப்பிட்டுப் பேசினார். "நாம் இறையாண்மை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு ஆதாரம்," என்று அவர் சொன்னார்.
இந்தோனீசிய அதிபர் விடோடோவும் துணை அதிபர் வேட்பாளர் இஸ்லாமிய சமய குரு மருஃப் அமினும் ஆதரவாளர்களைச் சந்தித் தனர். படம்: ராய்ட்டர்ஸ்

