அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராவதை தடுக்க சதி; ஆதாரம் கோரும் மகாதீர்

1 mins read

புத்ரா ஜெயா: அன்வார் இப்ராஹிம் தமக்குப் பிறகு பிரதமர் ஆவதைத் தடுப்பதற்குத் தாம் சதித் திட்டம் தீட்டுவதாக தம்மீது குற்றம் சாட்டுபவர்களிடம் அதற்கான ஆதாரத்தைப் பிரதமர் மகாதீர் முகமது கோரியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டை அவர் "மிக நுட்பமான குற்றச்சாட்டு" என்று தமது வழக்கமான ஏளனத் துடன் டாக்டர் மகாதீர் கூறினார். "அது பற்றி குற்றஞ்சாட்டுபவர் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். நான் எவரிடமும் இது பற்றி பேசியதே இல்லை," என்றார் அவர். "நான் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கியுள்ளேன். இதர கட்சி களின் உள்விவகாரங் களில் தலையிடும் அனாவசிய வேலை எனக்கு எப்போதும் இல்லை," என்று நேற்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் கூறி னார். கடந்த இருபது ஆண்டுகளில் அன்வாருக்கு எதிராக டாக்டர் மகாதீர் சதித் திட்டம் போடுகிறார் என்று கூறப்படுவது இது இரண் டாவது முறையாகும்.