சிங்கப்பூருக்கு விற்கப்படும் நீரின் விலையை பத்து மடங்குக்கு மேல் உயர்த்த மகாதீர் விருப்பம்

சிங்கப்பூருக்கு விற்கப்படும் நீரின் விலையை பத்து மடங்குக்கு மேல் உயர்த்த மகாதீர் விருப்பம்

2 mins read
e532af74-00ee-40b7-be1f-b39efcdf0e16
-

புத்ரஜெயா: சிங்கப்பூருக்கு விற்கப் படும் சுத்திகரிக்கப்படாத நீரின் விலையை பத்து மடங்குக்கு மேல் உயர்த்த வேண்டும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினத்தை அவர் காரணமாக சுட்டிக்காட்டியிருக் கிறார். மலேசியாவுக்கும் சிங்கப்பூருக் கும் தற்போது நடப்பில் உள்ள தண்ணீர் உடன்பாடு 2061ல் காலாவதியாகிறது. இதன் அடிப்படையில் ஜோகூர் ஆற்றிலிருந்து நாளுக்கு 250 மில்லியன் காலன் சுத்திகரிக்கப் படாத நீரைப் பெற்று வரும் சிங்கப் பூர், நாள்தோறும் ஐந்து மில்லியன் காலன் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஜோகூருக்கு வழங்கிவருகிறது. ஜோகூரிலிருந்து ஆயிரம் காலன் சுத்திகரிக்கப்படாத நீரை மூன்று காசுக்கு சிங்கப்பூர் வாங்கு கிறது. பின்னர் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆயிரம் காலனுக்கு ஐம்பது காசு என்ற அடிப்படையில் ஜோ ருக்கு சிங்கப்பூர் விற்றுவரு கிறது.

நீரைச் சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவைவிட குறைவாக கழிவு விலையில் ஜோகூருக்கு நீர் விற்கப்படுவதாக சிங்கப்பூர் தெரி வித்துள்ளது. கடந்த 1987ல் நீரின் விலையை மறுபரிசீலனை செய்யப்போவது இல்லை என மலேசியா முடிவு செய்தது. 1998ல் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் தண்ணீர் பிரச்சினையை எழுப்பியிருந்தார். ஆனால் புதிய உடன்பாடு எதுவும் காணப்படவில்லை.

2061ல் காலாவதியாகும் தற்போதைய தண்ணீர் உடன்பாட்டின் மூலம் ஜோகூரிலிருந்து நாள்தோறும் 250 மில்லியன் காலன் சுத்திகரிக்கப்படாத நீரை ஆயிரம் காலன் நீர் மூன்று காசு என்ற அடிப்படையில் சிங்கப்பூர் பெற்று வருகிறது. (சிங்கப்பூர் வெள்ளியில் ஒரு காசு). கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்