கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டது தொடர் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பெண்களுக்கு எதிரான வழக்கு விசாரணையைத் தொடர்வதற்கு போதிய வலுவான ஆதாரங்கள் இருப்பதாக மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அவ்விரு பெண்களும் அவர்களின் தற்காப்பு வாதத்தை முன்வைக்க ஷா அலாம் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மி அரிஃப்பின் உத்தரவிட்டார். கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் இந்தோனீசியப் பெண் சிட்டி அய்ஷா மற்றும் வியட்னா மியப் பெண் டோன் தி ஹுவோங் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவ்விரு பெண்களும் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி காலை 9 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத் தில் கிம்மின் முகத்தில் 'வி எக்ஸ்' எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய ரசாயனத் திரவத்தை பூசியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வியட்னாமியப் பெண் டோன் தி ஹுவோங்கும் (இடது) இந்தோனீசியப் பெண் சிட்டி அய்ஷாவும் (வலம்) ஷா அலாம் உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். படம்: இபிஏ

