கோலாலம்பூர்: முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் நடப்புக்கு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய பொய்ச்செய்தி தடுப்புச் சட்டத்தை மலேசிய நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது.
அந்தச் சட்டம் நடப்புக்கு வந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வகை செய்யும் மசோதாவை மலேசிய நாடாளுமன்றம் நேற்று நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த 6 மணி நேர விவாதத் தின்போது இந்தச் சட்டத்தை நீக்கக்கூடாதென தேசிய முன்னணி எம்பிக்களும் பாஸ் கட்சி எம்பிக்களும் வலியுறுத்தினர். எனினும் பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப அச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

