அமெரிக்காவைத் தாக்க விமானிகளுக்கு சீனா பயிற்சி அளிக்கக்கூடும்

அமெரிக்காவைத் தாக்க விமானிகளுக்கு சீனா பயிற்சி அளிக்கக்கூடும்

1 mins read

வா‌ஷிங்டன்: சீனா அதன் ராணுவத் திறனை வலுப்பபடுத்தி வரும் நிலையில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த விமானிகளுக்கு பயற்சி அளித்து வரலாம் அல்லது பயிற்சி அளிக்கக்கூடும் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நெடுந்தொலைவு வரை குண்டுகளை வீசித் தாக்கும் போர் விமானங்களைத் தயாரிப் பதில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ள தாகவும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இலக்குகளைத் தாக்குவதற்காக விமானிகளுக்கு சீனா பயிற்சி அளித்து வரலாம் என்றும் தற்காப்பு அமைச்சின் அறிக்கை தெரி வித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அதன் திறனை வலுப்படுத்தி வருகிறது.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் 6 போர் விமானங் கள் ஜப்பானிய தீவுகளுக்கு தென்மேற்குப் பகுதியில் உள்ள மியாகோ நீரிணைப் பகுதிக்கு மேலே பறந்ததாகவும் ஒகினாவோ கிழக்குப் பகுதியில் முதல் தடவையாக அந்த விமானங்கள் பறந்ததாகவும் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய தீவுகள் பகுதியிலும் தென்சீனக் கடல் பகுதியிலும் மிதக்கும் அணுமின் நிலையங்களை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையிலான ராணுவ உறவு கடந்த மே மாதம் முதல் பாதிக்கப்பட்டுள்ளது.