காபூல்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து அங் குள்ள பல பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துனர். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் புதன்கிழமை காபூல் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தினுள் நுழைந்து அவன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 48 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும் பாலானோர் இளையர்கள். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத ஆயத்தமாவதற்காக பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட இளையர்கள் பலர் தாக்குதலில் உயிரிழந்தனர். காபூலில் அண்மை யில் நடந்த தாக்குதல்களுக்கு தாங்களே காரணம் என்று ஐஎஸ் பயங்கரவாதிகள் குழு அறி வித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு உளவுத்துறையினரின் பயிற்சி நிலையம் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினர். பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அங்கு அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன
1 mins read

