சீனாவில் புயல்: வீடுகளிலிருந்து 53,000 பேர் வெளியேற்றம்

சீனாவில் புயல்: வீடுகளிலிருந்து 53,000 பேர் வெளியேற்றம்

1 mins read
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவின் ஷங்காய் நகரை புயல் தாக்கியுள்ளது. 'ரும்பியா' எனும் புயல் நேற்று அதிகாலை அந்நகரை நெருங்கியதாகக் கூறப்பட்டது. புயலுடன் கனமழையும் சேர்ந்து கொண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 53,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சீனாவை இவ்வாண்டில் இதுவரை மொத்தம் 18 சூறாவளிகள் தாக்கியுள்ளன. வடமேற்குத் திசையில் வீசும் இப்புயலின் சக்தி படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.