சீனா: அமெரிக்க தற்காப்பு அமைச்சின் அறிக்கை வெறும் யூகமே

சீனா: அமெரிக்க தற்காப்பு அமைச்சின் அறிக்கை வெறும் யூகமே

1 mins read

பெய்ஜிங்: அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு சீனாவின் ராணுவம் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வரலாம் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை வெறும் யூகமே என்று சீனாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை சீனாவின் உத்தி நோக்கங்களை தவறாக உணர்த்துவதாகவும் சீனாவின் ராணுவம் மிரட்டல் என்பது போன்று மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனாவின் தற்காப்பு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.