பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள திரு இம்ரான் கானுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. சிங்கப்பூருக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நட்பார்ந்த இருதரப்பு உறவும் வரலாற்றுத் தொடர்பும் இருப்பதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார். திரு இம்ரான் கானின் தலைமைத்துவத்தின் கீழ் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைவதை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் திரு லீ கூறியுள்ளார்.
இம்ரான் கானுக்கு பிரதமர் லீ வாழ்த்து
1 mins read

