வான் அசிஸா: தண்ணீர் பிரச்சினையால் சிங்கப்பூருடனான உறவு பாதிக்கப்படாது

வான் அசிஸா: தண்ணீர் பிரச்சினையால் சிங்கப்பூருடனான உறவு பாதிக்கப்படாது

1 mins read

கோலாலம்பூர்: தண்ணீர் பிரச்சினை புதிதல்ல என்றும் பல ஆண்டுகளாக இப்பிரச்சினை இருப்பதாகவும் கூறிய மலேசிய துணைப் பிரதமர் வான் அசிஸா, இப்பிரச்சினையால் சிங்கப்பூருடனான மலேசிய உறவு பாதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விற்கப்படும் தண்ணீர் விலை பத்து மடங்காக உயர்த்தப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அண்மையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் திருமதி வான் அசிஸா இவ்வாறு கூறியுள்ளார். பல விஷயங்களைக் கையாளுவதில் திரு மகாதீர் தனித்துவமான பாணியைப் பின்பற்றி வந்திருப்பதாகவும் வான் அசிஸா கூறினார். ஆனால் அதே நேரத்தில் சிங்கப்பூர் நமது பக்கத்து நாடு என்பதால் அவர்கள் நம்மை நன்கு புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் சொன்னார்.