கொரியப் போரின்போது பிரிந்த குடும்பங்கள் ஒன்றுகூடும் நாள்

1 mins read
bcab5847-3736-4362-97a9-3cc75ab79f93
-

சோல்: கொரியப் போரின்போது பிரிந்த குடும்பங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இரு கொரியாக்களுக்கும் இடையில் தற்போது பதற்றம் தணிந்துள்ள நிலையில் முன்பு பிரிந்தவர்கள் தங்கள் குடும்பத் தினரை அல்லது உறவினர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வடகொரியாவில் உள்ள ஒரு உல்லாசத்தலத்தில் உறவினர் கள் மூன்று நாட்கள் வரை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று தொடங்கவுள்ள நிலையில் தென்கொரியாவைச் சேர்ந்த பல குடும்பங்கள் நேற்றே ஓரிடத்தில் கூடின. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் பலர் திளைத்திருந் தனர். அவர்களில் ஒருவரான 92 வயது லீ கியும் சியோம் என்ற மூதாட்டி 68 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்.

68 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாயும் மகனும் இன்று சந்திக்கவுள்ளனர். தென்கொரியாவில் வசிக்கும் 92 வயது மூதாட்டி லீ கியும் சியோம் (வலது) தன் மகனை நேரில் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். படம்: இபிஏ