லொம்போக் தீவில் தொடர் நிலநடுக்க பேரிடர்கள்

1 mins read

லொம்போக்: இந்தோனீசியா வின் பிரபல சுற்றுலாத்தலமான லொம்போக் தீவில், ஞாயிற்றுக் கிழமை உலுக்கிய 6.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 40 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அத்தீவில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து அடுத்தடுத்து நான்கு நிலநடுக்கங் கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. கடந்த ஜூலை 28ஆம் தேதி உலுக்கிய 6.4 ரிக்டர் நிலநடுக்கத் திலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கத்திலும் கிட்டத்தட்ட 500 பேர் பலியாகினர். அந்த நிலநடுக்கங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடைசியாக ஞாயிற்றுக்கிழமை லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகளும் கட்டடங்களும் சேதம் அடைந்ததுடன் பல வீடுகளுக்கு மின்சார விநியோகம் கிடைக்கவில்லை. பாலித் தீவைப் போன்று லொம்போக் தீவையும் மேம்படுத்த இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ திட்ட மிட்டுள்ளார்.