கோலாலம்பூர்: மலேசியாவில் ஆகஸ்ட் 10ஆம் தேதியிலிருந்து காணாமற்போன 23 கிலோ கிராம் எடை கொண்ட கதிரியக்க சாதனத்தை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அந்த சாதனத்தின் மதிப்பு 75,000 ரிங்கிட் (S$25,000) என்று கூறப்படுகிறது. அந்த சாதனத்தில் ஐசோடோப் இரிடியம் எனும் கதிரியக்கப் பொருள் இருப்பதால் அதிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்படும் அபாயம் உள்ளது. அந்தச் சாதனம் அதன் கவச உறையிலிருந்து வெளியே எடுக்கப்படும் பட்சத்தில் 73 நாட்களுக்கு அதன் 'கதிர்வீச்சுத் தன்மை' நீடித்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்தச் சாதனம் பயங்கரவாதிகளின் அல்லது போராளிகளின் கைகளில் சிக்கினால் அது உலோகம் என்று கருதி அதனை அவர்கள் தனித்தனியாக பிரிக்கக்கூடும் என்றும் அந்த சாதனத்தை விற்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.
மலேசியாவில் கதிரியக்க சாதனம் மாயம்; அதிகாரிகள் தீவிர தேடுதல்
1 mins read

