அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட்டதாகக் குற்றச்சாட்டு

அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட்டதாகக் குற்றச்சாட்டு

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ரஷ்யா மட்டுமின்றி சீனா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் தலை யிட்டிருக்கலாம் என்று அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் தெரிவித்திருக்கிறார். அனை வரும் ரஷ்யாவை மட்டும் குற்றம் சொல்லாமல், சீனாவையும் பற்றி சற்று யோசிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று முன்தினம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். சீனாவுடன் அமெரிக்கா- வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் வேளையில் திரு போல்ட்டன் இவ்வாறு கூறி உள்ளார். சீனா, ஈரான், வட கொரியா, ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளின் தலையீடு குறித்த அக்கறைகள் இருப்பதாகவும் அதனைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் போல்ட்டன் ஏபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.