ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு கலிமந்தானில் பல இடங் களில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் அங்கு புகைமூட்டம் அதிகரித்துள்ளது. பொந்தியானா நகரம் மோசமான புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டிருப் பதால் அங்குள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் தற்காலிக மாக மூடுமாறு அந்நகர மேயர் சுடார்மிட்ஜி, அயர் அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார். பாலர் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகள் இம்மாதம் 27ஆம் தேதி வரை மூடப் பட்டிருக்கும் என்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை வகுப்புகளுக்கு திரும்பிச் செல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார். புகை மூட்டம் மேலும் அதிகரித்தால் பள்ளிக் கூடங்கள் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் என்று மேற்கு கலிமந்தான் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேற்கு கலிமந்தானில் தீப்பற்றி எரியும் இடங்கள் தற்போது 1,061 ஆக அதகிரத்துள்ளது என்று தேசிய பேரிடர் நிவாரண அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

