சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தனது தலைமைத்துவப் பதவிக்கு மிரட்டல் இருப்பதாக எழுந்த யூகங்களுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று திடீரென்று வாக்கெடுப்பு நடத்தினார். கேன்பராவில் நடந்த கட்சிக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமரை எதிர்த்துப் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் பீட்டர் டியுட்டன் தோல்வி அடைந்தார். வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற திரு டர்ன்புல், அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஆஸ்திரேலிய மக்களின் நலனுக்காக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அண்மைய நாட்களாக திரு டர்ன்புல் மீது குறை கூறப்பட்டு வருகிறது. குவின்ஸ்லாந்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது முதல் அவருக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது. கட்சித் தலைவராக அவர் நீடித்தால் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஒற்றுமைக்கு டர்ன்புல் வேண்டுகோள்
1 mins read

