டிரம்ப்: வடகொரியத் தலைவரை பெரும்பாலும் மீண்டும் சந்திப்பேன்

டிரம்ப்: வடகொரியத் தலைவரை பெரும்பாலும் மீண்டும் சந்திப்பேன்

1 mins read
e137e5fe-a58c-40c5-84f1-888e47e5b354
-

வா‌ஷிங்டன்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை பெரும்பாலும் மீண்டும் சந்தித்துப் பேசக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டங்களைக் கைவிடச் செய்வது தொடர்பில் திரு கிம்முடன் மீண்டும் பேச்சு நடத்த தான் விரும்புவதாகவும் திரு டிரம்ப் கூறியுள்ளார். திரு கிம் அணுவாயுதத் திட்டத்தை கைவிடுவாரா என்ற சந்தேகம் நீடிக்கும் வேளையில் அணுவாயுதங்களைக் களைய வடகொரியா குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரு டிரம்ப் கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.