அணு ஆயுதக் களைவுக்கு உறுதியளித்திருந்தபோதிலும் வடகொரியாவில் அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்தும் போக்கு தென்படவில்லை என ஐநா தெரிவித்துள்ளது. வடகொரியா தனது அணு சக்தித் திட்டங்களைத் தொடரு வதும் அது தொடர்பான பேச்சு களும் பெரும் கவலை தரக்கூடி யவை என்று அனைத்துலக அணுசக்தி முகவை தனது அறிக்கையில் தெரிவித்து ள் ளது. இவ்வறிக்கை கடந்த திங்கள் பின்னேரத்தில் அதன் தலைமை இயக்குநரால் வெளி யிடப்பட்டது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் முகவையின் இயக் குநரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கப்போ வதாக தலைமை இயக்குநர் யுகியா அமானோ கூறினார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஐநாவின் இந்த முகவையைச் சேர்ந்த சோதனை நிபுணர்களை வடகொரியா தனது நாட்டிலி ருந்து வெளியேற்றியது. அத்துடன் முகவையைச் சேர்ந்த எவரும் தமது நாட்டு எல்லைக்குள் வந்து சோதனை நடத்தவும் அது தடை விதித் தது. அதனைத் தொடர்ந்து பல் வேறு தகவல் பரிமாற்றங்கள் மூலமும் செயற்கைக்கோள் படங்களின் மூலமும் வடகொரி யாவின் அணுசக்தித் திட்டங் களை முகவை நோட்டமிட்டு வருகிறது.
இதற்கிடையே, வடகொரி யாவை தனது அதிகாரபூர்வ எதிரி என்று குறிப்பிடவேண்டாம் என்று தென்கொரிய ராணுவம் கேட்டுக்கொண்டு உள்ளது. இவ்வாண்டு வெளியிடப்பட உள்ள தற்காப்பு அமைச்சின் வெள்ளை அறிக்கையில் இந்த அம்சம் இடம்பெற வேண்டாம் என்று ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளதாக தென் கொரிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான யோன்ஹாப் கூறியுள்ளது.

