உல்லாசக் கப்பலை விற்க நீதிமன்றம் அனுமதி

உல்லாசக் கப்பலை விற்க நீதிமன்றம் அனுமதி

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறுவனத் தின் பணத்தைப் பயன்படுத்தி வணிகர் ஜோ லோ வாங்கியதாகக் கூறப்படும் இகுவானிமிட்டி எனும் உல்லாசக் கப்பலை விற்க மலேசிய அரசாங்கத்திற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை யார் வைத்துக் கொள்வது என்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த விவரத்தை வழக்கறிஞர் ஓங் சீ கவான் செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்கப்பலை விற்பதற்கான உத்தரவு கிடைத்துவிட்டது. அடுத்த நடவடிக்கை அக்கப்பலை விற்பதற்கான நடவடிக்கைகளை எவ்வளவு விரைவில் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும் என்று அவரத கூறினார். இகுவானிமிட்டி கப்பல் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் அல்லது ஜோ லோவின் பிரதி நிதிகள் எவரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை.