ஜார்ஜ் டவுன்: பினாங்கில் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின்போது 26 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 506 கிலோ கிராம் எடைகொண்ட போதைப்பொருளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். புக்கிட் அமான் மற்றும் பினாங்கு மாநில போலிசார் தாய்லாந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்த சோதனைகளின்போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர். அத்துடன் மூன்று வாகனங்கள், ரொக்கப் பணம், நகைகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றையும் காவல் துறையினர் சோதனை நடவடிக்கையின்போது பறிமுதல் செய்துள்ளனர் என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளும் இம்மாதம் 27ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பினாங்கில் போதைப்பொருள் பறிமுதல்: நால்வர் கைது
1 mins read

