அமெரிக்காவும் சீனாவும் பதிலுக்குப் பதில் வரி வதிப்பு

அமெரிக்காவும் சீனாவும் பதிலுக்குப் பதில் வரி வதிப்பு

1 mins read

பெய்ஜிங்: அமெரிக்காவும் சீனாவும் இறக்குமதிப் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிப்பை நடப்புக்கு கொண்டுவந்துள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 16 பில்லியன் அமெரிக்க டாலர் (S$22 பில்லியன்) பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25 விழுக்காடு வரி விதிப்பு நடப்புக்கு வந்துள்ளது. அதே போல அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் மருத்துவ கருவிகளுக்கு சீனாவும் 25 விழுக்காடு வரி வசூலிப்பதை நடப்புக்கு கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவும் சீனாவும் பதிலுக்குப் பதில் வரி விதிப்பை நடப்புக்கு கொண்டுவருவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.