பாரிசில் கத்தியால் தாக்கியவர் சுட்டுக்கொலை

1 mins read

பாரிஸ்: பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் 36 வயதான ஆடவர் ஒருவர் அவரது தாயையும் சகோதரியையும் கத்தியால் குத்திக் கொலை செய்த தாக போலிசார் கூறி யுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறின. கத்தியால் தாக்கிய நபர் போலிசாரை நோக்கி வந்தபோது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கும் பயங்கரவாதக் குழுவுக்கும் தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது இந்தத் தாக்குதலுக்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந் நிலையில் பாரிஸ் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்புப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பிரான்சின் நீஸ் நகரில் 2016 ஆம் ஆண்டு நடந்த தேசிய தினக் கொண்டாட் டத்தின்போது கனரக லாரியை அதிவேகமாக ஓட்டி வந்த ஐஎஸ் பயங்கரவாதி மக்கள் மீது லாரியை மோதியதில் 10 குழந்தை கள் உட்பட 84 பேர் உயிரிழந்தனர். பிரான்சில் 2015ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.