ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

1 mins read
Google News Preferred Icon

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் பதவிக்கான போட்டியில் திரு மால்கம் டர்ன்புல் வலுக்கட்டாயமாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்காட் மோரிசன் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண் டுள்ளார். புதிய தலைமைத்துவத்தை தேர்ந்தெடுப்பதற்காக கட்சிக் கூட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நிதி அமைச்சரான திரு மோரிசன் 45 எம்பிக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார். அப்பதவிக்கு போட்டி யிட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தோல்வி அடைந்தார். திரு மால்கமின் செல்வாக்கு அண்மையில் குறைந்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியவர் பீட்டர் டட்டன்.

கடந்த பத்து ஆண்டுகளில் கட்சிக்குள் நிலவிய பிரச்சினை யால் பதவியிலிருந்து விலக்கப் பட்டுள்ள நான்காவது ஆஸ் திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் ஆவார். "இவ்வளவு பெரிய நாடான ஆஸ்திரேலியாவின் தலைவராக இருந்ததை பெரும் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். ஆஸ்திரேலி யாவையும் மக்களையும் நான் நேசிக்கிறேன்," என்று திரு மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார். எம்பி பதவியிலிருந்து விலகப் போவதாகவும் திரு மால்கம் கூறியுள்ளார்.