வெனிசுவேலாவிலிருந்து வெளியேறும் மக்கள்

வெனிசுவேலாவிலிருந்து வெளியேறும் மக்கள்

1 mins read

கராக்கஸ்: வெனிசுவேலாவில் பொருளியல் நலிவடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். அவர்கள் பெரு, கொலம்பியா, இக்வடோர் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வரும் நிலையில் அந்த நாடுகள் குடியேறிகள் வருவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எல்லையில் கடுமை யான விதிமுறைகளை பெரு அரசாங்கம் விதித்துள்ளது. அதே போல இக்வடோரும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வெனிசுவேலாவிலிருந்து வெளி யேறும் குடியேறிகள் தவிக்க நேர்ந்துள்ளது. இப்பிரச்சினை நீடித்தால் மத்திய தரைக்கடல் பகுதியில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அகதிகள் பிரச்சினை போன்ற நிலை வெனிசுவேலா மக்களுக்கு ஏற்படும் என்று ஐநா எச்சரித்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து வெனிசுவேலாவிலிருந்து சுமார் 2 மில்லியன் பேர் வெளியேறி உள்ளனர்.