பிரேசிலில் ஒரே நாளில் 1,000 பேர் கைது

பிரேசிலில் ஒரே நாளில் 1,000 பேர் கைது

1 mins read
Google News Preferred Icon

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவர்களைக் கைது செய்யும் நோக்கத்துடன் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை போலிசார் கைது செய்துள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இதில் 275 பேர் கொலைக் குற்றவாளி களாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் காவல்துறையினர் நடத்திய இந்த சோதனையில் சுமார் 6,000 போலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்த தாகக் கூறப்பட்டது. பிரேசிலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததால் அதிகாரிகளுக்கு நெருக்குதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலிசார் சோதனை நடவடிக்கை யில் இறங்கியுள்ளனர்.