ஆப்கானில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் சுட்டுக்கொலை

ஆப்கானில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் சுட்டுக்கொலை

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் அபு சாத் எர்ஹாபி நேற்று மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் சுட்டுக் கொல் லப்பட்டான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் பயங்கர வாதக் குழுவைச் சேர்ந்த மேலும் பத்து பேர் கொல்லப்பட்டனர். நங்கார்ஹார் மாவட்டத்தில் உள்ள மறைவிடத்தில் பதுங்கி யிருந்த அவர்கள் மீது நேற்று ஆப்கான் படைகளும் வெளி நாட்டுப் படைகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான ஆயு தங்களும் வெடிபொருட்களும் அழிக்கப்பட்டதாகவும் அதிகாரி கள் கூறினர். ஆனால் இந்த சம்பவம் குறித்து பயங்கரவாதக் குழுவின் 'அமாக்' செய்தி நிறுவனம் கருத்து எதுவும் வெளியிட வில்லை.