அடிப்படை சுகாதாரமற்ற பள்ளிகள்; நோய்களை எதிர்நோக்கும் பிள்ளைகள்

அடிப்படை சுகாதாரமற்ற பள்ளிகள்; நோய்களை எதிர்நோக்கும் பிள்ளைகள்

1 mins read

லண்டன்: உலகின் பாதி பள்ளிக் கூடங்கள் சுகாதாரமற்று உள்ள தாகவும் இதனால் பிள்ளைகள் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ள தாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கிட்டத்தட்ட பாதி பள்ளிக் கூடங்களில் தண்ணீர், கழிவறை, கை கழுவும் இடம் ஆகியவை சுத்தமாக இல்லை என்கிறது உலக சுகாதார மையத்தின் யுனி செப் ஆய்வு. "இந்த அடிப்படை சுகாதார வசதிகூட இல்லாததால் பள்ளி செல் லும் சுமார் 900 மில்லியன் பிள் ளைகளின் உடல்நலம் கேள் விக்குறியாகி உள்ளது. "அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், தரமான கல்விச் சூழலை உருவாக்கமுடியாது," என்கிறார் இந்த ஆய்வை வழி நடத்திய உலக சுகாதார அமைப் பின் ரிக் ஜான்ஸ்டன்.

கிட்டத்தட்ட 20 விழுக்காட்டு பள்ளிகளில் சுத்தமான தண்ணீர் இல்லை. மூன்றில் ஒரு பங்கு பள்ளிகள் சுகாதாரமற்ற கழிவறை களைக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ள கை கழுவும் இடம் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுத்தமாக இல்லை என்றும் கூறு கிறது அந்த ஆய்வு. சகாரா பாலைவனத்தின் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா, கிழக்காசியா, தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள பள்ளிகள் சுகாதாரத்தில் மிகவும் மோச மான நிலையில் உள்ளன. பெரும்பாலானவர்கள் கல்வி கற்பதற்காக எச்சூழ்நிலையிலும் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆனால் சில பிள்ளைகள், சுகாதாரமற்ற கழிவறைகளால் பள்ளிக்குச் செல்வதைக்கூட தவிர்க்க நேரிடலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.