மகாதீர்: அதிகாரத்துவ ரகசிய சட்டம் ரத்து செய்யப்படாது

மகாதீர்: அதிகாரத்துவ ரகசிய சட்டம் ரத்து செய்யப்படாது

1 mins read

கோலாலம்பூர்: அதிகாரத்துவ ரக சிய சட்டம் முந்தைய காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந் தாலும் அச்சட்டம் தேவை என்று தான் நம்புவதாகக் கூறினார் மலேசியப் பிரதமர் மகாதீர். "சட்டம் முழுமையானதாக இல்லை. அதைத் தவறாக பயன் படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், சட்டத்தை மீறாமல் அதை மதித்து நடப்பார்கள் என்ற நம்பிக்கை மிக வும் முக்கியம்," என்று மலேசிய கினி ஊடகத்திற்கு அளித்த பேட் டியில் மகாதீர் கூறினார். எந்தவொரு ஆவணத்தையும் அரசாங்கம் ரகசியம் என்று வரையறுக்கவும் அதை வெளி யிடுபவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதைப் பயன்படுத்திய முந் தைய அரசாங்கம் 1எம்டிபி ஊழல் தொடர்பான அறிக்கையை ரகசிய ஆவணமாக வரையறுத்தது. ஆனால் அதன் ஒரு பகுதியை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஜி ரம்லி வெளி யிட்டதால் அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட் டது.