பொதுத் தேர்தல் நிதி முறைகேடு: மலேசிய அதிகாரிகள் எழுவர் கைது

பொதுத் தேர்தல் நிதி முறைகேடு: மலேசிய அதிகாரிகள் எழுவர் கைது

1 mins read
Google News Preferred Icon

மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக் கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி யதாகக் கூறி உயர்பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் உட்பட அரசாங்க அதிகாரிகள் எழுவர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரதமர் துறை யின் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டோரில் அப்பிரிவின் உதவித் தலைமை இயக்குநரும் அடங்கு வார். மற்ற அறுவரும் நிர்வாக, அரச தந்திர சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள். அந்த உதவித் தலைமை இயக்குநர் மலேசிய லஞ்ச, ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதர ஆறு சந்தேகப் பேர்வழிகளும் அவர்களின் அலுவலகங்களில் வைத்து கைது செய்யப் பட்டனர்.