டிரம்ப்: மெக்சிகோவுடன் முக்கிய வர்த்தக உடன்பாடு

டிரம்ப்: மெக்சிகோவுடன் முக்கிய வர்த்தக உடன்பாடு

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவும் மெக்சிகோவும் முக்கிய வர்த்தக விதிமுறைகள் குறித்து பொதுவான உடன்பாடு கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க நெருக்குதல் அதிகரித்து வருவதால் அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் அந்த உடன்பாடு காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறுதியாக இந்த உடன்பாடு கனடாவின் சம்மதத்துடன் முழுமை பெறும் என்று கூறப்படுகிறது. கனடா இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக இடம் பெறுகிறது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, அதிபர் டிரம்ப்புடன் வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இரு தலைவர்களும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தியிருப்பதாகவும் மேலும் பேச்சுவார்த்தையை வெற்றிகரமானதாக்கும் நோக்கத்துடன் இரு நாட்டு அதிகாரிகள் இந்த வாரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ட்ரூடோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.