ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் பல பில்லியன் டாலர் செலவில் கட்டப்படவுள்ள ஃபாரஸ்ட் சிட்டி மேம்பாட்டுத் திட்ட வீடுகள் வெளிநாட்டினருக்கு விற்கப்படாது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருப்பது ஜோகூர் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி அளிப்பதாக அம்மாநிலத் தின் நிர்வாக மன்றத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். இந்த புதிய கட்டுப்பாடு குறித்து ஜோகூர் அரசாங்கத்திற்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை என்று ஜோகூர் வீடமைப்பு, கிராமப்புற மேம்பாட்டுக் குழுவின் தலைவர் சுல்கிஃபிலி அகமட் கூறியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. 100 பில்லியன் அமெரிக்க டாலர் (S$136 பில்லியன்) மதிப்பிலான ஃபாரஸ்ட் சிட்டி திட்டம் ஜோகூர் அரசாங்கத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதே என்றும் புதிய கட்டுப்பாடு குறித்து மத்திய, மாநில அரசாங்கங் களுக்கு இடையில் எவ்வித கலந் துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் சுல்கிஃபிலி அகமட் கூறினார். பிரதமர் மகாதீர் அறிவித் திருக்கும் புதிய கட்டுப்பாடு குறித்து பிரதமர் அலுவலகத்திடம் தாங்கள் விளக்கம் கேட்க விருப்பதாகவும் அவர் சொன்னார். "அத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டினர் 1 மில்லியன் ரிங்கிட் (S$333,00) அல்லது அதற்கு மேற்பட்ட விலை மதிப்புள்ள சொத்துகளை மட்டுமே வாங்க முடியும் என்ற கட்டுப் பாடுகளை நாங்கள் ஏற்கெனவே விதித்துள்ளோம்," என்றும் அவர் சொன்னார்.
மகாதீரிடம் வி ளக்கம் கேட்க விரும்புகிறது ஜோகூர்
1 mins read

