இந்தோனீசியாவை உலுக்கிய 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

இந்தோனீசியாவை உலுக்கிய 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

1 mins read
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீயாவின் கிழக்குப் பகுதியை நேற்று 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் கூறினர். டிமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை பகுதியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. நேற்று உலுக்கிய நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக கருதப்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. சேத விவரங்கள் பற்றிய உடனடி தகவலும் வெளியாகவில்லை. பல தீவுகளைக் கொண்ட இந் தோனீசியாவில் ஆண்டுதோறும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையுடன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தோனீசியாவில் 168,000 பேர் உயிரிழந்தனர். அண்மையில் இங்குள்ள லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கதில் 500 பேர் உயிரிழந்தனர்.