ஹில்லரியின் மின்னஞ்சல் தகவல் திருட்டு: சீனாவை சாடும் டிரம்ப்

ஹில்லரியின் மின்னஞ்சல் தகவல் திருட்டு: சீனாவை சாடும் டிரம்ப்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் திரு டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளின்டனின் மின்னஞ்சல் தகவல்கள் களவு போனதற்கு சீனாவே காரணம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் தெரிவிக்கவில்லை. அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் திரு டிரம்ப் சீனா மீது குறை கூறியுள்ளார். அத்துடன் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் அவரது கொள்கைகள் தலைகீழாக மாறும் என்று திரு டிரம்ப் எச்சரித்தார்.