அணுசக்தி உடன்பாட்டிலிருந்து விலக ஈரான் முடிவு

அணுசக்தி உடன்பாட்டிலிருந்து விலக ஈரான் முடிவு

1 mins read

டெஹ்ரான்: அனைத்துலக நாடு களுடன் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டினால் ஈரானுக்கு எந்தப் பலனும் இல்லாத பட்சத்தில் அந்த உடன் பாட்டிலிருந்து விலக இருப்பதாக ஈரானியத் தலைவர் ஆயத்துல்லா ஹாமேனி தெரிவித்துள்ளார். புதிய உடன்பாடு செய்து கொள்வது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுநடத்த விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த 6 நாடு களுக்கும் இடையே 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்பாடு காணப்பட்டது.

அந்த உடன்பாட்டுக்குப் பின்னரும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்ப தாக அண்மையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகு அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த உடன்பாட்டிலிருந்து விலகு வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ஈரான் மீது கடுமையான பொருளியல் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானின் பொருளியல் கடும் பின்னடைவை சந்தித்திருப்பதால் விலைவாசி பன்மடங்கு அதி கரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஈரான் சந்தித்து வரும் வரலாறு காணாத பொருளியல் சரிவு, விலைவாசி உயர்வு தொடர்பாக ஈரானிய அதிபரின் பதில் திருப்தியளிக்காததால் ஈரானிய மக்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ஆளும்கட்சி தலைவர் ஆயத்துல்லா ஹாமேனி "நமது நாட்டின் நன்மைக்கு உதவாவிட்டால், அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நாம் தயாராக இருக்க வேண்டும்' எனக் குறிப் பிட்டுள்ளார். இதனால் அந்த உடன்பாட்டிலிருந்து ஈரான் எந்த நேரத்திலும் விலகக்கூடும் என்று தெரிகிறது.