சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக மலேசியா நடவடிக்கை

சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக மலேசியா நடவடிக்கை

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக மலேசிய அரசு இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் கீழ் கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக முதன் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சட்டவிரோதக் குடியேறி களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கட்டுமானப் பகுதிகள் உட்பட பல இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தவுள்ளனர்.

சட்டவிரோதக் குடியேறிகள் அபராதத் தொகையாக 300 ரிங்கிட்டும் சிறப்பு அனுமதிச் சீட்டு வாங்க 100 ரிங்கிட்டும் செலுத்தினால் அவர்கள் தங்களின் சொந்த நாடு திரும்பு வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது. அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. சென்ற ஆண்டு ஜூன் நிலவரப்படி மலேசியாவில் 1.7 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் சட்டப்படி அனுமதி பெற்று வேலை செய்கின்றனர். ஆனால் ஒரு மில்லியன் பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் மலேசியாவில் சட்டவிரோதமாக வேலை செய்வதாக மதிப்பிடப் பட்டுள்ளது.