மலேசியாவில் பொருட்களுக்கு 5-10% வரி, சேவை வரி 6%

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் செப்டம்பர் 1 முதல் (நாளை) புதிய வரி முறை நடப்புக்கு வருகிறது. அதன்படி பொருட்களுக்கு 5% முதல் 10% வரை விற்பனை வரி விதிக்கப்படும். சேவைகளுக்கான வரி 6% ஆக இருக்கும். மலேசியாவின் சுங்கத் துறை தலைவர் சுப்பிரமணியம் துளசி இந்த விவரங்களை நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அறி வித்தார்.

மலேசியாவின் முந்தைய அரசாங்கம் நடப்புக்குக் கொண்டு வந்திருந்த பொருள் சேவை வரிக்குப் (ஜிஎஸ்டி) பதிலாக டாக்டர் மகாதீர் முகம்மதின் அரசாங்கம் விற்பனை, சேவை வரி (எஸ்எஸ்டி) என்ற புதிய வரியை நடப்புக்கு கொண்டு வருகிறது. ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் எஸ்எஸ்டி வரி முறை குறைவான பொருட் களுக்கும் சேவைகளுக்குமே உரியதாக இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி 6% ஆக இருந்தது. இப்போது விற்பனை வரியிலிருந்து மொத்தம் 5,443 பயனீட்டாளர் பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த பொருட் களுடன் ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை பத்து மடங்காகும்.

முந்தைய ஜிஎஸ்டி வரியின் கீழ் 545 பயனீட்டாளர் பொருட் களுக்கு மட்டுமே விலக்கு அளிக் கப்பட்டு இருந்தது என்று தி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித் துள்ளது. ஜிஎஸ்டி வரி 2015ல் நடப்புக்கு வந்தது.