அனைத்துலக விண்வெளி நிலையத்தில் காற்றுக் கசிவு

அனைத்துலக விண்வெளி நிலையத்தில் காற்றுக் கசிவு

1 mins read

வா‌ஷிங்டன்: அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சிறு மோதல்கள் ஏற்பட்டிருக்கும் சாத்தியங்களால் உண்டான காற்றுக் கசிவினை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பாறை போன்ற ஒன்று விண்ணில் பறந்தது இதன் மீது பட்டதால் இந்தக் கோளாறு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அதனால் இரண்டு மில்லி மீட்டர் அளவிற்கு ஓட்டை ஏற்பட்டது. விண்வெளி வீரர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விண்வெளி மையத்தில் உள்ள ஆறு பேருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ஹூஸ்டன், டெக்சஸ் மற்றும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன.