உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற போவதாக டிரம்ப் மிரட்டல்

உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற போவதாக டிரம்ப் மிரட்டல்

1 mins read
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: உலக வர்த்தக அமைப்பு அமெரிக் காவை நடத்தும் விதத்தை மாற்றிக்கொள்ளப் போவ தில்லை என்றால் அதில் இருந்து விலகப் போவதாக அந் நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் அச்சு றுத்தியுள்ளார். "அவர்கள் மாறவில்லை என் றால் நான் உலக வர்த்தக அமைப்பி லிருந்து வெளியேறுவேன்" என புளூம்பெர்க் செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்துக்கான விதிமுறைகளை வகுக்கவும் நாடு களுக்கு இடையே ஏற்படும் சச்சர வுகளைத் தீர்க்கவும் உலக வர்த் தக அமைப்பு நிறுவப்பட்டது. உள்ளூர் தொழில் அமைப்பு களை வெளிநாட்டுச் சந்தையிடம் இருந்து பாதுகாக்க பல வரிகளை விதித்து வரும் திரு டிரம்ப், உலக வர்த்தக அமைப்பால் அமெரிக்கா நியாமாக நடத்தப்படவில்லை என சாடியுள்ளார்.

டிரம்பின் இந்த அச்சுறுத்தல் அவரின் வர்த்தகக் கொள்கை களுக்கும் உலக வர்த்தக அமைப்பி ன் வெளிப்படையான வர்த்தக முறைக்கும் இடையே உள்ள முரண்பாட்டை கோடிட்டுக் காட்டுகி றது. உலக வர்த்தக அமைப்பில் சச் சரவுகளுக்கு நீதி வழங்கப் புதிய நீதிபதிகளை நியமிப்பதை அமெ ரிக்கா அண்மைக் காலமாக தடுத்து வருகிறது. எனவே தீர்ப் புகள் வழங்குவதில் தடைகள் ஏற்ப ட்டுள்ளன.