புதிய மலேசியாவில் வரலாற்று சிறப்புமிக்க தேசிய தினம்

புதிய மலேசியாவில் வரலாற்று சிறப்புமிக்க தேசிய தினம்

1 mins read

புத்ராஜெயா: மலேசியா நேற்று தனது 61வது தேசிய தினத்தை விமரி சையாகக் கொண்டாடியது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி யிலிருந்து விடுதலை பெற்ற நாள் "மெர்டேக்கா தினம்" என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியாவில் புதிய பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் கீழ் நடக்கவிருக்கும் முதல் தேசிய தினக் கொண்டாட்டமாக அது அமைவதால் அந்நாட்டின் வர லாற்றில் முக்கிய மைல்கல்லாக இடம்பிடிக்கிறது. இந்த அணிவகுப்பில் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, மலேசிய பேரரசர் முகம்மது வீ, துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் ஆகியோருடன் மலே சிய அமைச்சர்களும் கலந்துகொண்ட னர்.

மேலும் சிறப்பம்சமாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயா வில் தேசிய தினக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் அங்கு இரண்டு முறை மட்டுமே தேசிய தினக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. கடைசியாக அங்கு 2005ல் தேசிய தின அணிவகுப்பு நடைபெற்றது. 'பிராங் புசார்' என முன்னதாக அழைக்கப்பட்ட புத்ராஜெயாவை மேம்படுத்துவதற் கான யோசனை யை டாக்டர் மகாதீர் 1995ல் முன்வை த்திருந்தார். தேசிய தின அணிவகுப்பு உணர்வில் திளைக்க பல்லாயிரக்க ணக்கான பேர் ஒன்றுதிரண்டதா கவும் தொலைக் காட்சி மூலம் அதை மில்லியன் கணக்கானோர் கண்டுகளித்ததா கவும் மலேசிய ஊடகங்கள் தெரி வித்தன.