பாலஸ்தீன அகதிகளுக்கு நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

பாலஸ்தீன அகதிகளுக்கு நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

1 mins read

நியூயார்க்: பாலஸ்தீன அகதிகளின் செலவுகளுக்காக அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அதன் நிதி செலவினங்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குத் திருப்திகரமாக இல்லாததால் இனிமேலும் பாலஸ்தீன அகதிகளின் நல்வாழ்வுக்கு நிதி வழங்கும் திட்டத்தை தொடர முடியாது என்றும் அமெரிக்காவின் சார்பில் அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியை நிறுத்திவிட அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்ததாகவும் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார். அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தம் அளிப்பதாக ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த செயல் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான 'தாக்குதல்' என்று பாலஸ்தீன அதிபரின் பேச்சாளர் கூறியுள்ளார்.