வாஷிங்டன்: சிங்கப்பூரிலும் பாப்புவா நியூகினியிலும் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளின் உச்சநிலைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ள மாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரி வித்துள்ளது.
திரு டிரம்ப்பிற்குப் பதிலாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வார் என்றும் வெள்ளை மாளிகை அறி வித்துள்ளது. சிங்கப்பூரில் வரும் நவம்பர் மாதம் ஆசியான் -அமெரிக்க கூட்டமும் கிழக்கு ஆசிய உச்சநிலைக் கூட்டமும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாப்புவா நியூகினியில் ஏபெக் எனப்படும் ஆசிய பொருளி யல் வட்டாரக் கூட்டம் நடைபெற உள்ளது.
2013ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அதிபர் ஒருவர் அமெரிக்க-ஆசியான் கூட்டத் திலும் கிழக்கு ஆசிய உச்சநிலைக் கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. 2013ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஒபாமா, அமெரிக்க அரசாங்கப் பணிகள் முடக்கம் காரணமாக ஆசிய உச்ச நிலைக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை.
திரு ஒபாமாவிற்குப் பதிலாக அப்போதைய துணை அதிபர் ஜோ பைடன் அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.

