மகாதீர்: அம்னோ அழிந்துபோவது உறுதி

மகாதீர்: அம்னோ அழிந்துபோவது உறுதி

1 mins read
f1b1d51e-f9b4-4dce-af0b-64c04c98cc85
-

கோலாலம்பூர்: அம்னோ கட்சி அழிந்துபோகும் என்றும் அதற்கு எதிர்காலம் இல்லை என்றும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கணித்துள்ளார். "அம்னோ துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கிறது. மக்கள் அறவே வெறுப்பதால் அக்கட்சிக்கு இனிமேல் எதிர்காலமே இல்லை. அதனால்தான் அண்மைய பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு அவர்கள் வலுவான ஆதரவை அளித்தனர்," என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் டாக்டர் மகாதீர் கூறினார்.

வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க மன்றத்துடனான சந்திப்பின்போது, "அம்னோ தலைவர்களை நீண்டகால விசாரணைக்கு உட் படுத்துவது ஒரு கட்டத்தில் மலேசிய அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துமா?" என டாக்டர் மகாதீரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அம்னோவில் ஊழல் ஆழமாக வேர்விட்டு உள்ளது என்றும் அவர் சொன்னார். "முன்னாள் பிரதமர் நஜிப் கட்சியினருக்குப் பணத்தைக் கொடுத்து, கட்சியின் தலைமைத்துவத்தையும் ஏன் அடிமட்ட அளவிலும்கூட கட்சியை வலு வற்றதாக்கிவிட்டார்," என்றார் டாக்டர் மகாதீர்.