'ஜோ லோ'வை மலேசியாவுக்குக் கொண்டுவர 'தனிப்பட்ட முயற்சிகள்'

'ஜோ லோ'வை மலேசியாவுக்குக் கொண்டுவர 'தனிப்பட்ட முயற்சிகள்'

1 mins read

நியூயார்க்: மலேசியாவிலிருந்து சீனாவுக்குத் தப்பியோடிய வர்த்தகர் லோ தெக் ஜோவை கொண்டுவர 'தனிப்பட்ட முயற்சிகள்' எடுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்தார். மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே குற்றவாளிகளைத் திரும்ப ஒப்படைக்கும் ஒப்பந்தம் இல்லை என்று அவர் அமெரிக்க வெளியுறவு மன்ற சந்திப்பில் நேற்று சுட்டினார். 'ஜோ லோ' என பிரபலமாக அழைக்கப்படும் அவரை சீனா மறைத்து வைக்கிறது எனக் குற்றஞ்சாட்டுவது மிகச் சிக்கலானது என்று திரு மகாதீர் கூறினார். 1எம்டிபி சர்ச்சை தொடர்பிலான நீதிமன்ற விசாரணைக்காக ஜோலோ தேடப்பட்டு வருகிறார்.