கோவில்களுக்குள் சுற்றுப்பயணிகள் நுழைவதற்கு தடை; பாலி திட்டம்

கோவில்களுக்குள் சுற்றுப்பயணிகள் நுழைவதற்கு தடை; பாலி திட்டம்

1 mins read
e129d5e0-bbac-4f57-a1fb-d45baaa98524
-

பாலி: கோவில்களின் முக்கிய பகுதிகள் சிலவற்றுக்குள் சுற்றுப்பயணிகள் செல்வதற்கு பாலி அரசாங்கம் தடை செய்வதற்கான் ஏற்பாட்டை செய்துவருகிறது. சுற்றுப்பயணிகள் பலர் பாலி இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட சம்பவங்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாலியின் தபனான் நகரிலுள்ள 'நுஹூர் பத்துக்காரு' சிவன் கோவிலின் கோபுரம் மீது பின்லாந்தைச் சேர்ந்த 36 வயது சுற்றுப்பயணி ஒருவர் அமர்ந்திருப்பதைக் காட்டும் படம், இன்ஸ்டகிராம் தளத்தில் பரவியது. இது குறித்து இந்துக்கள் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். கோவில்களுக்குள் இருக்கும் முக்கிய பகுதிகளுக்குச் செல்ல சுற்றுப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் அவற்றின் வெளிப்பகுதிகளைச் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு என்றனர் மாநில அதிகாரிகள்.